நீ எங்கே போனாய் ஆர்.எஸ்.சிவாஜி.


செப்டம்பர்,03-

குணச்சித்திர நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களையும்மகிழ்வித்த ஆர்.எஸ்.சிவாஜி காலமான செய்தி அனைவருக்கும் அதிர்ச்சித் தரக்கூடியதுதான். அவருக்கு வயது 66..

நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரர் ஆர்.எஸ்.சிவாஜி.1981ஆம் ஆண்டு வெளியான பன்னீர்புஷ்பங்கள் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

’அபூர்வ சகோதரர்கள்’, ‘அன்பே சிவம்’,மீண்டும் ஒரு காதல்கதை’, ‘விக்ரம்’, ‘சத்யா’, ‘ஜீவா’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தனித்துவமான நடிப்பை வழங்கியவர்.

, 1989ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. ஜனகராஜை இவர் அடிக்கடி கலாய்க்கும்’தெய்வமே ..நீங்க எங்கேயோ போய்ட்டீங்க ..’ என்ற வசனம் மிகவும் பிரபலம்.

அதன்பிறகு கமல்ஹாசனின் பல படங்களில் தவறாமல் இடம்பெற்றார்.ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சனின் ’கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்திருந்தார். சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆர்.எஸ்.சிவாஜி கடைசியாக நடித்த ‘லக்கி மேன்’ என்ற படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. இதில் அவர்யோகி பாபுவுக்கு கார் ஓட்ட பயிற்சி அளிப்பவராக நடித்திருந்தார்

‘எங்கேயோ போய் விட்ட’ சிவாஜிக்கு கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். ’எனதுநண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ்.சிவாஜிமறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன்.

சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே பெரிதும்அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கமல் பதிவிட்டுள்ளார்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *