டிசம்பர்-20.
திருநெல்வேலியில் பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே மாயாண்டி என்பவர் இன்று காலை வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாயாண்டியை வெட்டிக் கொலை செய்துவிட்டு காரில் தப்பிச் சென்றவர்களை கண்டுபிடிக்க போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் இவர்கள் மூன்று பேரும் பிடிட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டு கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக இருந்த ராஜாமணி என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக மாயாண்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
“எங்கும் கொலை எதிலும் கொலை” என்ற அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல” என்று அதிமுக பொதுச் செயளாலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
“நீதிமன்ற வாயில்களில் அச்சமின்றி குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டதற்கு சாட்சி இது” என்று அவர் தமது அறிக்கையி்ல் குறிப்பிட்டு இருக்கிறார்.
“சட்டத்தின் மீதோ, அதை காக்கும் இடத்தில் உள்ள அரசின் காவல்துறை மீதோ குற்றவாளிகளுக்கு அச்சம் அறவே இல்லாத நிலை. குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றுடத எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டு உள்ளார்.
*