பகல்ல 40, இரவுல 50-னு யாரு சொன்னது….. ஜகா வாங்கியது சென்னை போக்குவரத்து காவல்துறை!

June 21,23

வேக கட்டுப்பாடு வரம்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கமளித்துள்ளது.

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திங்கள் கிழமை அளித்த பேட்டி வருமாறு

“சென்னை மாநகரில் வாகனங்களின் வேகத்தைக் கண்காணித்து அபராத ரசீது அனுப்பும் ஸ்பீடு ரேடார் கன் கருவி 30 இடங்களில் பொருத்தப்பட இருக்கிறது. முதல்கட்டமாக 10 இடங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டு உள்ளது இதனை தொடர்ந்து வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய மேலும் 20 இடங்களில் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்படும் .

பகல் நேரத்தில் 40 கிலோமீட்டர் வேகத்தையும், இரவு நேரத்தில் 50 கிலோமீட்டர் வேகத்தையும் கடந்து செல்லும் வாகனங்களை இந்த கருவி படம் பிடித்து, வாகன உரிமையாளருக்கு அபராத ரசீதை அனுப்பிவிடும். அதாவது விதிகளை மீறுபவர்கள் தானியங்கி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அவர்களது மொபைல் எண்ணிற்கு அபராதம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். விபத்துகளை குறைக்கவே இந்த கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது”

இவ்வாறு சங்கர் ஜிவால் கூறியிருந்தது அனைத்து ஊடகஙகளிலும் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் சென்னையில் 40 கி.மீ.வேக கட்டுப்பாடு என்ற அறிவிப்பு பற்றி விமர்சனம் எழுந்த நிலையில் சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கமளித்துள்ளது. அதில், ஆய்வு செய்வதற்காகவே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன; தற்போது அபராதம் விதிக்கப்படாது. நாட்டின் பிற பெருநகரங்களுடன் ஒப்பிட்டு அதற்கேற்ப வேக கட்டுப்பாடு விவகாரத்தில் முடிவெடுக்கப்படும்.வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு வரம்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறியுள்ளது.

யோசிக்காமல் விளம்பரத்துக்காக எதையாவது அறிவிப்பது, விமர்சனங்கள் ஏற்பட்ட பிறகு அவற்றைக் கைவிடுவது என்ற அணுகுமுறை கடந்த சில  மாதங்களாக அதிகரித்து வருவது குறிப்பிடத் தக்கது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *