பகவதி ரீ ரிலீஸ், கில்லி வசூலை முறியடிக்குமா ?

கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படமான ‘பகவதி’, நாளை, ரீ –ரிலீஸ் ஆகிறது.

‘இளையதளதி’ விஜயின் நடிப்புத்திறமையை
வெளிக்கொணர்ந்த படம் ‘பூவே உனக்காக’,
அவரை ஆக்ஷ்ன் ஹீரோ ஆக்கிய
படம் ‘பகவதி’.

ஏ. வெங்கடேஷ் டைரக்ட்
செய்திருந்தார்.
லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த படம்.
விஜயுடன், ஜெய், ரீமா சென், வடிவேலு, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
தேவா இசையமைப்பில் உருவான இந்தப்படத்தின்
பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனவை.
காமெடி காட்சிகளும் கொண்டாடப்பட்டது.

அந்த சமயத்தில் உருவான விஜய் படங்களுள் அதிக பொருட்செலவில் தயாரான படம் ‘பகவதி’ என்பது குறிப்பிடத்தக்கது.

கிளைமாக்சில் இடம் பெற்ற ரயில் சண்டை காட்சி
ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

பகவதி , உலகம் முழுக்க நாளை ரீ –ரிலீஸ் ஆகிறது.
விஜயை, இன்னொரு தளத்துக்கு கொண்டு சென்ற ‘கில்லி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன் ரீ –ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் சாதனை நிகழ்த்தியது.
அந்த சாதனையை , பகவதி முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *