பங்குனி உத்திரத் திருவிழா-மருதமலை கோவிலில் பக்தர்கள் தரிசனம்

பங்குனி உத்திரத்தையொட்டி, கோவையில் உள்ள புகழ்பெற்ற மருதமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் உள்ள பல கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. அந்த வகையில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, பால், பன்னீர், ஜவ்வாது போன்ற 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னர் ரத்தின அங்கி சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர். பங்குனி உத்திரத்தையொட்டி, அதிகாலை முதலே பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் பாதயாத்திரையாக பல்வேறு இடங்களில் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்தனர்.

நண்பகல் 12 மணிக்கு பக்தர்களின் பிரமாண்ட பால்குட ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு சுப்பிரமணியருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், தங்கமயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். இதைத் தொடர்ந்து, நேற்று 6 மணிக்கு சாயரட்ச பூஜை, தங்க ரதத்தில் சுப்பிரமணிய சாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். இதேபோல, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், கோவை காந்திபார்க் தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பங்குனி உத்திர விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *