மகேஷ்பாபு படத்தின் ‘ஷுட்டிங்’ காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
‘ஆர் ஆர் ஆர்’ படத்துக்கு பிறகு எஸ்.எஸ். ராஜமவுலி ‘பான் வேர்ல்டு ‘படத்தை இயக்கி வருகிறார். மகேஷ்பாபு நாயகனாக நடிக்கிறார், இருவரும் இணையும் முதல் படம் இது.
தற்காலிமாக ‘SSMB 29’ என படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மகேஷ்பாபு தவிர, பிரியங்கா சோப்ரா, பிருதிவிராஜ் ஆகிய இருவரும் இந்த படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.
ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ,இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ஆலை ஒன்றில் நடைபெற்றது.
அங்கு காசி நகரம் போன்று அரங்கம் அமைக்கப்பட்டு ‘ஷுட்டிங்’ நடந்தது. இந்த அரங்கத்தை யாரோ செல்போனில் படம் பிடித்து இணையத்தில் ‘லீக்’செய்தனர்.
இப்போது 2 ஆம் கட்ட படப்பிடிப்பு ஒடிசா மாநிலத்தில் உள்ள மலைப்பகுதியில் தொடங்கி உள்ளது. படப்பிடிப்புக்கு போடப்பட்ட , அதன் அரங்கமும் , வீடியோ எடுக்கப்பட்டு வெளியானது.
இந்த நிலையில் ஒடிசாவில் படப்பிடிப்பு காட்சிகளே வீடியோ மூலம் படம் பிடிக்கப்பட்டு இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அந்த காட்சி இதுதான் :
வீல் சேரில் பிருதிவிராஜ் , அமர்ந்திருக்கிறார்.அவரது அடியாட்கள் , மகேஷ்பாபுவை அங்கே தூக்கி வருகிறார்கள். அவரை பிருதிவிராஜ் காலடியில் போடுகிறார்கள்.மகேஷ்பாபு மண்டியிட்டு காலடியில்,கிடக்க , அவரது தலையை நோக்கி அடியாட்கள் துப்பாக்கிகளை நீட்டுகிறார்கள்.
காருக்குள் இருந்து இந்த காட்சி படம் பிடிக்கப்பட்டு, பிறகு இணையத்தில் ‘ரிலீஸ்’ செய்யப்பட்டுள்ளது. இதனால் ராஜமவுலி, அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தயாரிப்பு ஆட்களின் அஜாக்கிரதையால் , காட்சிகள் ‘லீக்’ ஆனதால் அவர் கோபம் கொண்டு அவர்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.
‘செக்யூரிட்டி’ ஆட்களை உடனடியாக மாற்றுமாறும் ஆணை பிறப்பித்தார்.
—