கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் குருபுராவில் வீடு ஒன்றில் போலீசார் அதிரடி சோதனை நடத்திய போது வாடகைக்கு குடி இருந்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பது தெரியவந்தது..
இவர்கள் வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா செடி வளர்ப்பது எப்படி என்பது குறித்து ஆன்லைனில் கற்றுக்கொண்டுள்ளனர். பின்னர் ஆன்லைன் மூலம் கஞ்சா செடிக்கான விதைகளை வாங்கியுள்ளனர். வீட்டின் ஒரு அறையில் கூடாரம் அமைத்து ஹைடெக் முறையில் செயற்கையாக சூரிய வெளிச்சம் கொண்டுவரும் வகையில் விளக்குகளை அமைத்து கஞ்சா செடி வளர்ப்பை நடத்தி இருக்கிறார்கள்.செயற்கை காற்றுக்காக ஆறு மின்விசிறிகளையும் அமைத்து இருந்தனர்.
கடந்த நான்கு மாதங்களாக கஞ்சா செடி வளர்ப்பு கண்ணும் கருத்துமாக நடைபெற்று வந்தது. அவ்வப்பபோது கஞ்சா இலைகளைப் பறித்து உலர்த்தி, பொடியாக்கி சக மாணவர்களுக்கு விற்று வந்துள்ளனர்.
தகவல் ஒன்றின் பேரில் வீட்டைச் சுற்றி வளைத்து அங்கிருந்த மூன்று மாணவர்களையும் பிடித்த கர்நாடக மாநில போலிசார் அவர்களுக்கு உதவியதாக மேலும் இரு மாணவர்களையும் கைது செய்து உள்ளனர். இவர்கள் ஐந்து பேரில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர்களிடமிருந்து உலர வைக்கப்பட்ட கஞ்சா, கஞ்சா செடி, கஞ்சா விதைகள், ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
போனமா, படிச்சமா, வந்தமான்னு இல்லாமா கஞ்சா வளர்த்த கம்பி எண்ற வேலையைத் தவிர வேறு என்னா கிடைக்கும்.
000