ஜெயிலர் படம் கடந்த வியாழக்கிழமைவெளியான நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஒருவாரகால ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார்.
அங்குள்ள ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்ற ரஜினி சாமியார்களை சந்தித்தார். தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தார். சாமியார்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
இதனை தொடர்ந்து ரஜினி பத்ரிநாத் கோயிலுக்கு சென்றார். அவர் கோயிலுக்கு வந்த தகவல் அறிந்ததும் அவரைக்காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ரஜினியுடன் அவர்கள் கைகுலுக்கியும், நலம் விசாரித்தும் உரையாடினர்.ரஜினியுடன் ரசிகர்கள் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
குளிருக்காக கையுரை மற்றும் மப்ளர் அணிந்த படி கோவிலுக்கு சென்று வழிபட்டார். ரஜினி வருகையையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதனிடையே கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள லூலூ மாலில் அவர், தனது குடும்பத்துடன் சென்று ஜெயிலர் படத்தை பார்த்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெயிலர் படத்தை இரு தினங்களுக்கு முன்னர் பார்த்து விட்டு, இயக்குநர் நெல்சனை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.