பரந்தூர் மண்ணை தொட்டு விஜயின் அரசியல் பயணம் ஆரம்பம்.

ஜனவரி-20,
பரந்தூரில் விவசாய நிலத்தை ஆக்கிரமித்து விமான நிலையம் கட்டுவதற்கு தவெக தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்
விவசாயம் செய்யப்படாத நிலத்தை ஆக்கிரமித்து புதிய விமான நிலையததை கட்டுமாறு அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

பரந்தூரில் புதிய விமான நிலையம் கட்டுவதற்கு எதிராக 900 நாட்களுக்கு மேலாக போராடி வரும் மக்களை ஏகானாபுரம் கிாரமத்தில் இன்று நேரடியாக சந்தித்த நடிகர் விஜய் விவசாயிகளுக்கு துணை இருப்பதாக வாக்குறுதி அளித்தார்.

அப்போது பேசிய அவர்..

என்னுடைய கள அரசியல் பயணம் இங்கிருந்துதான் தொடங்குகிறது.

பரந்தூரில் விமான நிலையத்தை அமைத்து, சென்னையை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் திட்டத்தை நான் எதிர்க்கிறேன்.

விமான நிலையம் வரக்கூடாது என நான் சொல்லவில்லை; இந்த இடத்தில் வரக்கூடாது என்றே சொல்கிறேன்; வளர்ச்சிக்கு எதிரானவன் நான் அல்ல.

சென்னை மழை வெள்ளத்தில் தத்தளிப்பதே, இங்குள்ள நீர் நிலைகள் அழிக்கப்பட்டதால்தான் என சமீபத்திய ஆய்வு சொல்கிறது.

அரிட்டாப்பட்டி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நான் வரவேற்கிறேன்.

ஆனால், அதே நிலைப்பாடுதான் பரந்தூர் விவகாரத்திலும் எடுத்திருக்க வேண்டும்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசைக் கேட்கிறேன்.

விவசாய நிலங்கள் இல்லாத பகுதியில் விமான நிலையத்தை அமைக்க வேண்டும்.

வளர்ச்சி திட்டங்களுக்காக விவசாயத்தை அழிக்கக் கூடாது.

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக சட்டத்திற்கு உட்பட்டு எல்லா போராட்டங்களையும் நடத்துவோம்.

நம்பிக்கையோடு இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.
இவ்வாறு விஜய் பேசினார்.
நடிகர் விஜய் பயணத்தை முன்னிட்டு அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்ட்டு இருந்தனர்,
*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *