பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 264 வது போரட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் மொட்டை அடித்து பிச்சை எடுக்கும் நிலையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்தது. இதற்காக குடியிருப்பு பகுதிகள், நீர்நிலைகள், ஏரிகள், உள்ளிட்டவைகளை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 264 வது நாளாக ஏகனாபுரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை அரசு கைவிடாததை கண்டித்து இன்று கிராம மக்கள் ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து, கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு கட்டங்களில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தும் மத்திய மாநில அரசுகள் திட்டத்தை கைவிடாமல் பணிகளை விரைவுப் படுத்தி உள்ளது கண்டித்து என்று இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவும், விரைவில் அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.