ஜனவரி-21,
பரந்தூர் புதிய விமான நிலையம் பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.
பரந்தூர் விமான நிலைய திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாதிக்கப்படாமல் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
பண்ணூரில் 1,546 குடும்பங்கள், பரந்தூரில் 1,005 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன.
விமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம், சுற்றுலா வளர்ச்சிபெறும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.