மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குகி பழங்குடியின பெண்கள் இருவரை மெய்தி சமூகத்தை சேர்ந்த கும்பல் ஆடைகளைக் களைந்து ஊர்வலமாக இழுத்துச் சென்றது.
அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.தடுக்க முயன்ற குகி சமூக இளைஞர் கொல்லப்பட்டார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
அந்த கோரச்சம்பவம் நிகழ்ந்த அதே நாளில்,இம்பாலில் மேலும் இரண்டு பழங்குடியின பெண்கள் கும்பல் ஒன்றால் சீரழிக்கப்பட்ட தகவல்வெளியாகியுள்ளது.
அதன் விவரம்:
இம்பால் நகரில் கார் சுத்தம் செய்யும் கடையில் 21 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரிகள் வேலை பார்த்து வந்தனர். பழங்குடியின குகி சமூகத்தை சேர்ந்த இவர்கள் வீடு, மெய்தி மக்கள் வசிக்கும் கோன்வுங் மனாக் பகுதியில் உள்ளது.
மே 4 -ஆம் தேதி அந்த வீட்டுக்குள் 200 பேர் கொண்ட கும்பல் கதவை உடைத்து அத்துமீறி நுழைந்துள்ளது.கும்பலில் சில பெண்களும் இருந்தனர்.
அந்த பெண்கள், இரு சகோதரிகளையும் மானபங்கப்படுத்துமாறு கும்பலில் இருந்த இளைஞர்களை தூண்டினர்.
இதையடுத்து இளைஞர்கள் சிலர் இருவரையும் பலாத்காரம் செய்துள்ளனர். சகோதரிகளின் தலையை மொட்டை அடித்து, கொலை செய்தனர்.
கொல்லப்பட்ட பெண்களின் தந்தை பாதிரியாராக உள்ளார். இந்த குரூர சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தும் ,குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குமுறிக் கொட்டி இருக்கிறார்கள்.
இன்னும் எவ்வளவு பேரோ?
000