சினிமாவில் குருட்டு நம்பிக்கைகள் அதிகம். முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுக்கும் அப்படி ஒரு நம்பிக்கை உண்டு.
கே.பாலச்சந்தரின் ‘எதிர் நீச்சல்’என்ற டைட்டிலை , தனது படத்துக்கு வைத்தார். அந்தப்படம் ஓடியது. அதன்பிறகு, தனது படங்களுக்கு பழைய சினிமாக்களின் தலைப்புகளை, அவற்றின் தயாரிப்பாளர்கள் அனுமதி இல்லாமல் சுருட்டினார்.
காக்கிச்சட்டை, வேலைக்காரன், மாவீரன், அமரன் போன்ற பழைய படங்கள் வாகை சூடியவை. அவற்றை தன் படங்களுக்கு சூட்டிக்கொண்டார், சிவா.
ஆட்டைத்தொட்டு.. மாட்டைத்தொட்டு மனிதனை தொட்ட கதையாக , இப்போது சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’ படத்தின் தலைப்பை தனது புதிய படத்துக்கு வைத்துள்ளார்.
இந்த விவகாரம் சிவாஜி ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.அவர்கள் போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.
ஆனாலும் சிவகார்த்திகேயன் அசரவில்லை.ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்யும் சிவாவின் புதிய படத்துக்கு ‘மதராஸி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதே பெயரில் அர்ஜுன் நடித்த படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்ததுள்ளது.
–