பாகுபலி இயக்குநருக்கு பிடித்த தமிழ்நாட்டு சாப்பாட்டுக் கடை..

இந்திய சினிமாவை உலக அளவில் கவனிக்க வைத்தவர்களில் முக்கியமானவர் ராஜமவுலி. பாகுபலி ஒன்று மற்றும் இரண்டு ஆகிய படங்கள் இவருடைய இயக்கத்தின் மகுடங்கள். காட்சி அமைப்புகள்,கதை சொல்லும் விதம் என அனைத்திலும வித்தியாசம் காட்டி ரசிகர்களைக் கட்டிப் போட்டிருந்தார் ராஜமவுலி.

பாகுபலிக்குப் பிறகு அவர் இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’. படமும் இன்னுமொரு வெற்றிக் காவியம். அந்த படத்தில் இடம்பெற்று உள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் உலகின் உயரிய திரை விருதான ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்து உள்ளது. இப்படி ராஜமவுலியைப்  பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

‘ஆர்.ஆர்.ஆர்’.வெற்றிக்குப் பிறகு மகேஷ் பாபுவை வைத்து அடுத்தப் படத்தை உருவாக்க ஆயத்தமாகி வரும் ராஜமவுலி சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டை ஓசை படமால் குடும்பத்துடன் சுற்றி வந்து உள்ளார்.பயணத்தை முடித்துக் கொண்டு ஐதராபாத் திரும்பிய  அவர், ஆர அமர டுவிட்டர் மூலம் தமிழ்நாட்டில் ரசித்தவற்றை வெளிப்படுத்தி இருக்கிறார்.

“தமிழ் நாட்டின் மத்தியப் பகுதியில் பயணம் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.  என் மகளும் தமிழ்நாட்டுக் கோயில்களை தரிக்க வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசைக் கொண்டிருந்தாள். அனைவரும் ஜுன் கடைசி வாரத்தில் பயணத்தை ஆரம்பித்தோம்.

ஸ்ரீரங்கம்,தஞ்சாவூர்,தாராசுரம்,கானாடு காத்தான், ரமேஸ்வரம், மதுரை,தூத்துக்குடி ஆகிய இடங்களுக்குச் சென்று இருந்தோம். பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள் உட்பட தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்களின் கட்டிடக் கலையும் பொறியியல் அறிவும், நுணுக்கமான வேலைப்பாடுகளும் மெய்சிலிர்க்க வைத்தன. கும்பகோணத்தில் உள்ள மந்த்ரா, ராமேஸ்வரத்தில் உள்ள முருகன் மெஸ் என அனைத்து இடங்களிலும் உணவு அருமையாக இருந்தது. மூன்று மாதங்கள் வெளிநாட்டில் பயணம் செய்துவிட்டு திரும்பிய எனக்கு தாய் நாட்டு மண்ணில் செய்த பயணம் உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் அளித்து உள்ளது”.

இவ்வாறு ராஜமவுலி டுவிட்டரில் எழுதி அதனுடன் பகிர்ந்து உள்ள படங்கள் வைரலாகி வருகின்றன.

பொன்னியின் செல்வன் படத்தைப் பார்த்த பிறகு தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை ராஜமவுலிக்கு ஏற்பட்டு இருக்கலாம் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *