பாரதிராஜாவின் பட்டறையில் மெருகேற்றப்பட்ட வர்கள் 80 மற்றும் 90 – களில், கோடம்பாக்கத்தை , தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள்.
இயக்குநர்கள். கணக்கிட்டுப் பார்த்தால், பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, கே.ரங்கராஜ், மனோஜ்குமார், பொன்வண்ணன் என்று நீண்ட பட்டியல் போடலாம்.
இவர்களில் பாக்யராஜுக்கு தனிப்பெருமை உண்டு. பாக்யராஜை, தனது 16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள் படங்களில் துண்டு துக்கடா வேடங்களில் நடிக்க வைத்த, பாரதிராஜா, தனது ‘ புதிய வார்ப்புகள் ‘ படத்தில் கதாநாயகனாக உயர்த்தினார். நடிகை ரதி அறிமுகம் ஆனதும் அந்தப்படத்தில்தான்.
பாக்யராஜ், இயக்கிய முதல் படம் ,’சுவரில்லாத சித்திரங்கள் ‘.அவரும் அதில் நடித்தார்.அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. தொடர்ச்சியாக , தான் டைரக்ட் செய்யும் படங்களில் எல்லாம் அவரே ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.
மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த 7 நாட்கள், தூறல் நின்றுபோச்சு, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் என அனைத்துமே வெற்றி படங்கள்.
இதனை அடுத்து பாக்யராஜ், நாயகனாக நடித்து இயக்கியபடம் ‘சின்னவீடு’ .இளையராஜா, இசை அமைத்த அந்த படத்தின் பாடல் கம்போசிங் சேலம் கோகுலம் ஓட்டலில்தான் நடந்தது.
பாக்யராஜின் மனைவியாக நடித்த கல்பனா, குண்டாக இருப்பார் .இதனால் அவரை சதா கரித்துக்கொட்டுவார், பாக்யராஜ் தன்னை மட்டம் தட்டும் கணவனின் நெஞ்சில் உறைப்பது போல் அந்த படத்தில் ஜீவனுள்ள ‘டயலாக்’ ஒன்று , இடம் பெற்றது.
என்ன வசனம் ?
‘உங்களுக்கு தோளில் போடும் துண்டாக நான் ,இல்லாவிட்டாலும், காலில் போடும் செருப்பாக இருப்பேன் ‘என்பது அந்த டயலாக்’
இந்த வசனத்துக்கு சொந்தக்காரர், பார்த்திபன்,.அவர் , பாக்யராஜிடம் அப்போது உதவியாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார்.
திரைக்கதை –வசனத்தில் அடிச்சிக்க ஆள் இல்லை என கூறப்பட்ட பாக்யராஜுக்கே,’ டயலாக் டெலிவரி’ செய்தவர், அவரது சீடர் பார்த்திபன்.
இந்த சம்பவத்தை அவ்வப்போது பகிர்ந்து கொள்ள பாக்யராஜ் தவறுவதில்லை.
—