செப்டம்பர்,13-
அண்மையில் 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 4 தொகுதிகளில் வென்றது.பாஜக 4 இடங்களை பிடித்தது.
மே.வங்க முதலமைச்சராக உள்ள மம்தா பானர்ஜியும், உத்தரபிரதேசத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் அகிலேஷ் யாதவும், இந்த தேர்தலில் பாஜகவுக்கு மரண பயத்தை காட்டியுள்ளனர். அவர்களின் கட்சிகள்,தங்கள் மாநிலங்களில் பாஜகவை வேரறுத்துள்ளன. இந்த இரு மாநிலங்களிலும், வலுவாக இருந்து வந்த பாஜக இடைத்தேர்தலில் வீழ்த்தப்பட்டுள்ளது.b இன்னும் எட்டு மாதங்களில் மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தோல்வி, பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
திரினாமூல் காங்கிரஸ் தலைவரான. மம்தா பானர்ஜி ஆட்சி நடத்தும் மே.வங்காளத்தில் உள்ள துப்குரி தொகுதி .கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வென்ற தொகுதி. பாஜக கோட்டையாக கருதப்படும் ஏரியா. ’இந்தியா’ கூட்டணியில் திரினாமூல் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் உள்ளன.ஆனால் அந்த மாநிலத்தில் கூட்டணி இல்லை. துப்குரி இடைத்தேர்தலிலும் திரினாமூல் காங்கிரசை எதிர்த்து சி.பி.எம். வேட்பாளரை நிறுத்தியது.
இதனால் எளிதாக வென்று விடலாம் என பாஜக கனவு கண்டது. இந்த வெற்றி, மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும் எனவும் கணக்கு போட்டது.ஆனால் திரினாமூல் காங்கிரஸ் வேட்பாளர் 4309 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று, பாஜகவிடம் இருந்து துப்குரி தொகுதியை கைப்பற்றினார்.பாஜகவின் கனவு சிதைந்து போனது.
அதே போன்ற சூழல் தான், உ.பி.யிலும். அங்குள்ள கோஷி தொகுதியில், கடந்j தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் தாராசிங் வெற்றி பெற்றார். அண்மையில் அவர் பாஜகவில் இணைந்தார். எம்.எல்.ஏ.பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. பாஜக வேட்பாளராக தாராசிங்கே களம் இறக்கப்பட்டார்.ஆனால் அவரை, சமாஜ்வாதி வேட்பாளர் சுதாகர் சிங் சுமார் 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஆளுங்கட்சியாக இருந்தும் பாஜக தோல்வி அடைந்திருப்பது, மாநில தலைவர்களை மட்டுமல்லாமல்,மேலிட தலைவர்களையும் மிரளச்செய்துள்ளது.
காரணம்?
ஓட்டு வித்தியாசம்.
அந்த தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளருக்கு காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் ஆதரவு அளித்தனர். தேர்தலில் போட்டியிடாமல் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஒதுங்கி கொண்டது.
அந்த கட்சியின் வாக்கு வங்கியாக உள்ள தலித் ஓட்டுகள், தங்களுக்கு சிந்தாமல் ,சிதறாமல் கிடைக்கும் என பாஜக
நம்பியது. ஆனால் நம்பிக்கை பொய்த்து போனது.சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மேற்கொண்ட ராஜ தந்திரங்கள், பாஜகவை வீழ்த்தி விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மாயாவதி இல்லாமலேயே உ.பி.யில் பாஜகவை காலி செய்து விடலாம் என்ற நம்பிக்கை ’இந்தியா’ கூட்டணி தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இரண்டு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள், தங்களுக்கான எச்சரிக்கை என பாஜக உணர்ந்துள்ளது.அந்த இரண்டு தொகுதிகளிலும் பாஜகவின் உயர் மட்டக்குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோரை சந்தித்து, கருத்துகளை கேட்க முடிவு செய்துள்ளனர்.
தனது பாதையில் இரண்டு பூனைகள் குறுக்கே வந்து விட்டதை,பாஜக அபச குணமாகவே கருதுகிறது.
000