அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு:
மதுரை மாநாடு பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை.
அதிமுக மதுரை மாநாடு போல் இனி யாராலும் மாநாடு நடத்த முடியாது.
அதிமுக உயிரோட்டமுள்ள கட்சி, எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.
இனி அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும்.
பல சோதனைகளை சந்தித்ததும் அதிமுக தான், அதனை வெற்றியாக்கியதும் அதிமுக தான்.
தமிழ்நாட்டிலே அதிக தொண்டர்களை கொண்ட கட்சி அதிமுக தான்.
அதிமுக செயற்குழு, பொதுக்குழுவால் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்குகிறது.
தேசிய கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை; மக்கள்தான் நம்முடைய எஜமானர்கள்.
மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் காங்கிரஸ், பாஜக செயல்படுகிறது.
மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுத்தது இல்லை.
யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழக மக்களுக்கு நன்மை செய்ததில்லை.
மக்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.
பாஜக உடன் எப்போதும் கூட்டணி இல்லை.