பாரதீய ஜனதா கட்சியுன் குறித்து பேசிக்கொண்டு இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்
அவர், தமது அணி மாவட்டச் செயலாளர்களை சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய அவர், சசிகலாவை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளேன்,அவர் இதுவரை பார்க்க நேரம் தரவில்லை, தந்தால் சந்திப்பேன் என்றார்
இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், பாஜகவிற்கு தோழமையாக இருக்கலாம் ஆனால் தொண்டர்களாக இருக்க முடியாது என்று கூறினார். அவர்களை பகைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இல்லை, அதேபோல அவர்கள் தயவுக்காக காத்திருக்க கூடிய அவசியமும் நமக்கு கிடையாது என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் குறிப்பிட்டார்.
கூட்டத்தின் முடிவில் பேட்டியளித்த பன்னீர்செல்வம், நான் ஆதரவு தராவிட்டால் பழனிசாமி அரசு கவிழ்ந்து விடும் என்ற நிலை ஒரு முறை ஏற்பட்டது. அன்று எதிராக நான் வாக்களித்திருந்தால் பழனிச்சாமி அரசு கவிழ்ந்திருக்கும். தமிழகத்திற்கு நல்ல காலமும் பிறந்திருக்கும்.
நான்காண்டு காலம் பல பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார் அந்த அளவிற்கு துரோகங்கள் நிகழ்ந்து உள்ளன.
கொங்கு மண்டலத்தில் அடுத்த மாநாடு நடைபெறும் என்று திருச்சி மாநாட்டில் அறிவித்திருந்தேன். அந்த மாநாட்டுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்
என்னிடம் பாரதிய ஜனதா கட்சியினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் தேர்தல் கூட்டணிக்குறித்து ஏதும் பேசவில்லை, தேர்தல் வந்த பிறகு கூட்டணி குறித்து பேசுவோம்.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கினார். அதன் பின்பு அவரே அதனை நிறுத்தி வைத்துள்ளார் அது குறித்து பேசுவதற்கு ஏதும் இல்லை. இவ்வாறு ஓ.பன்னீர் செலவம் தெரிவித்தார்.
பாரதீய ஜனதா கட்சி ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேசிக்கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் ஓ. பன்னீர் செல்வம் கூறுவது போன்று அவருடன் பேசுகிறார்களா என்பது தெரியவில்லை. இதனை அண்ணாமலைதான் விளக்க வேண்டும்.
000