டிசம்பர்-2,
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்து அவதூறாக X-தளத்தில் பதிவிட்டது, பெரியார் சிலையை உடைப்பேன் என்று பேசியது ஆகிய இரண்டு வழக்குகளில் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா-வுக்கு தலா ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
கனிமொழி பற்றி அவதூறாக X தளத்தில் பதிவிட்டது மற்றும பெரியார் சிலையை உடைப்பேன் என்று பேசியது தொடர்பாக அவர் மீது கடந்த 2018- ல் பதியப்பட்ட வழக்கில் இந்த தண்டனை விதிக்கப்பட்டது. அவர் இரண்டு வழக்குகளிலும் விதிக்கப்பட்ட தலா ஆறு மாத சிறைத் தண்டனையை தனித் தனிதனியே அதாவது ஒரு வருடம் அனுபவிக்க வேண்டும் என்று எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் தீா்ப்பளித்து உள்ளார். மேலும் ஒவ்வொரு வழக்கிலும் அவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
மேல் முறையீடு செய்வதற்கு கால அவகாசம் வேண்டும் என்று எச். ராஜா தரப்பு கேட்டுக் கொண்டதை ஏற்று தண்டனையை முப்பது நாட்களுக்கு நிறுத்தி வைத்த நீதிபதி ஜி.ஜெயவேல். அவரை ஜாமீனி விடுவித்து உத்தரவிட்டார்.
அவதூறாகப் பேசுவது மலிந்துவிட்ட இந்த நாளில் அரசியல் கட்சித் தலைவர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
*