ஆகஸ்டு,04-
தெலங்கானா மாநிலத்தில் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான,. தெலங்கானா ராஷ்டிர சமிதி , இப்போது, பாரத் ராஷ்டிர சமிதி கட்சியாக தேசிய அவதாரம் எடுத்துள்ளது. சந்திரசேகர ராவ் மீது,கடும் அதிருப்தி நிலவுகிறது.
ஒவைசி தலைமையிலான ஏ.ஐ,எம்.ஐ.எம். எனும் முஸ்லிம் ஆதரவு கட்சி இவருக்கு ஆதரவாக உள்ளது. தெலங்கானாவில் முஸ்லிம்கள் வாக்கு அதிகம் இருப்பதால், சந்திரசேகர ராவே 3-வது முறையாக ஆட்சி அமைப்பார் என கூறப்படுகிறது.
தெலங்கானாவில், இதுவரை நடந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்று ஆளும் கட்சியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ராகுல்காந்தி பாத யாத்திரையால், அண்டை மாநிலமான கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால்,தெலங்கானா காங்கிரஸாருக்கு புதிய உற்சாகம் பிறந்துள்ளது.
மற்ற மாநிலங்களை போன்று, தெலங்கானாவிலும் ’ஆகர்ஷ் தெலங்கானா’’ எனும் திட்டத்தின் கீழ் முக்கிய பிரபலங்களை பாஜகவில் இழுக்கும் படலம் தொடங்கி உள்ளது. இரு தினங்களுக்கு முன் நடிகை ஜெயசுதா பாஜகவில் இணைந்தார்.
இதனை தொடர்ந்து, தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
விஜயசாந்தி மேடக் தொகுதியிலும், ஜெயசுதா செகந்திராபாத் தொகுதியிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 30 பேரை பாஜக மேலிடம் அறிவித்துள்ளது.
45 பேர் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
000