பாதிரியாருக்கு அடி- உதை,, திமுக எம்.பி. மீது வழக்கு. அறிவாலயம்  நோட்டீஸ்.

பாதிரியாருக்கு அடி- உதை,, திமுக எம்.பி. மீது வழக்கு. அறிவாலயம்  நோட்டீஸ்.

திருநெல்வேலியில் பிஷப் தாக்கப்பட்ட  புகாரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்திடம் விளக்கம் கேட்டு தி.மு.க தலைமை கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நெல்லை திருமண்டல சி.எஸ்.ஐ. டயோசிஸ் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலைக்குழு செயலாளர், மற்றும் ஜான்ஸ் பள்ளியின் தாளாளர் ஆகிய 2 பொறுப்புகளில் இருந்தும் ஞானதிரவியம் எம்.பியை டயோசிஸ் பேராயர் பர்னபாஸ் நீக்கம் செய்திருந்தார். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எம்.பியின் ஆதரவாளர்கள் திருமண்டல தலைமை அலுவலகத்தின் சில அறைகளை நேற்று பூட்டிவிட்டனர்

இது பற்றிய தகவல் கிடைத்ததும் பேராயர் தரப்பைச் சேர்ந்த ஊழிய ஸ்தானத்தின் பிஷப் காட்பிரே நோபல் என்பவர் பூட்டப்பட்ட அலுவலக அறைகளைத் திறக்குமாறு வலியுறுத்தினார். இதை ஏற்க மறுத்த ஞானதிரவியத்தில் ஆதரவாளர்கள் அவரை அடித்து உதைத்தார்கள். அவர் அடி தாங்க முடியாமல் பிஷப் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து பிஷப் அளித்த புகாரின் பேரில், எம்.பி ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர் மீது பாளையங்கோட்டை போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர் தம்மை தாக்கிய ஞானதிரவியம் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீடியோ வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்துக் கொண்டது தொடர்பாக 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமெனக் கூறி எம்.பி. ஞானதிரவியத்திற்கு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்,

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *