டிசம்பர்-21,
டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பாப்கார்னுக்கு 18% வரை வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
பேக்கேஜ் செய்யப்படாத உப்பு மற்றும் பெப்பர் பாப்கார்னுக்கு 5% வரியும், பேக்கேஜ் செய்யப்பட்டு லேபிளிடப்பட்ட பாப்கார்னுக்கு 12% வரியும், கேரமல் வகை பாப்கார்னுக்கு 18% வரியும் விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.
பயன்படுத்தப்பட்ட பழைய எலெக்ட்ரிக் கார்களை மறுவிற்பனை செய்வதற்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கவும் ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு செய்துள்ளது.
பழைய பெட்ரோல் மற்றும் டீசல் கார் மறுவிற்பனைக்கு 12% ஆக உள்ள வரியை 18% ஆக உயர்த்தவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
#