குஜராத் மாநிலத்தில் பள்ளி ஒன்றில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வினாத்தாளில் சச்சின் டெண்டுல்கர் எந்த விளையாட்டின் வீரர் என்ற கேள்வி ஒன்று இடம் பெற்றிருந்தது. இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. அதிசயம் என்னவென்றனால் அந்த கேள்விக்காக கொடுக்கப்பட்ட 4 விருப்பங்களில் ஹாக்கி, கபடி, கால்பந்து, செஸ் ஆகியவை மட்டுமே இடம் பெற்றிருந்தது. ஆனால் கிரிக்கெட் இடம் பெறவில்லை. இந்த வினாத் தாளை சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது பற்றி சச்சின் என்ன நினைப்பாரோ என்று தெரியவில்லை.
2023-04-10