ஆகஸ்டு,06-
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முழு முயற்சி மேற்கொண்டு , அதற்கு வடிவம் கொடுத்தவர் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.
அவரது மாநில தலைநகர் பாட்னாவில் தான் எதிர்க்கட்சிகள் முதன் முறையாக ஒன்று கூடினர். பின்னர் பெங்களூருவில் திரண்டு தங்கள் அணிக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டினர். இப்போதைக்கு 26 எதிர்க்கட்சிகள் அந்த அணியில் உள்ளனர்.
அடுத்தக் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது.இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதிஷ்குமார், ’இந்தியா’ அணியின் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக அவர் முன்னிறுத்தப்படுவார் என கூறப்படும் நிலையில்,இன்னொரு சூடான தகவலும் அனல் பறக்கிறது.
விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் நிதிஷ்குமார், உத்தர பிரதேச மாநிலம் போல்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட தீர்மானித்துள்ளாராம். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான நிதிஷ், போல்பூர் தொகுதியில் நிற்பதற்கான ஏற்பாடுகளை அங்குள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் இப்போதே தொடங்கி விட்டனர்.
இந்த தொகுதிக்கு அப்படி என்ன சிறப்பு என்றால் முன்னாள் பிரதமர் நேரு, ல் 1952, 57, 62 ஆகிய மூன்று முறைபோட்டியிட்டு வென்ற தொகுதி ஆகும். மற்றொரு முன்னாள் பிரதமர் வி.பி.சிங், 1971 ஆம் ஆண்டு இந்த தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தார். இருவரும் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கினர். இப்போது இந்த தொகுதி பாஜக வசம் உள்ளது.
போல்பூர் தொகுதிக்கு மூன்றாவது பிரதமரை தேர்ந்தெடுத்தோம் என்ற பெருமை கிடைக்குமா ?
000