மே 24
பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது தமிழகத்தின் சோழர்களின் செங்கோல் பிரதமர் மோடி இடம் அளிக்கப்படும் என உள்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாகவும் நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் முதல் பிரதமர் ஆன நேருவுக்கு திருவாடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் தற்போது பிரதமர் மோடியிடம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
சோழர்களின் செங்கோல் என்பது 1947-க்கு பிறகு மறக்கடிக்கப்பட்டு விட்டது. நாடு சுதந்திரம் அடைந்த போது (ஆகஸ்ட் 14, 1947 இரவு 10 மணியளவில்) நேருவிடம் திருவாவடுதுறை ஆதினம் கொடுத்த செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது. இது ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்த நாட்டு மக்களுக்கு அதிகாரம் மாறியதற்கான அடையாளமாகும்.
2
சோழர்களின் செங்கோல் தற்போது அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த செங்கோலை பிரதமர் மோடி பெற்று நாடாளுமன்ற கட்டிடத்தில் வைப்பார். 8ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் செங்கோல் பயன்படுத்தும் மரபு உருவானதாகவும் நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன் இந்த செங்கோல் நிறுவப்பட உள்ளதாகவும் அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்த செங்கோலை பிரதமர் மோடியிடம் தமிழகத்தை செர்ந்த ஆதினங்கள் ஒப்படைப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.