டிசம்பர்-03,
தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலை பேசி மூலம் கேட்டறிந்தார்.
அப்போது, தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் ஒன்றிய அரசு வழங்கும் என முதலமைச்சரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்ததாக தெரிகிறது.
இதனிடையே தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். அவர், தமது அறிக்கையில் புயலினால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 2.11 இலட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன என்று கூறியுள்ளார்.
சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ₹2000 கோடி ரூபாயை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்குமாறு பிரதமர் மோடியைக் கேட்டுக் கொள்வதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
*