பிரபாகரன் மனைவி, மகள் இருக்குமிடம். . தாரகா வெளியிட்ட தகவல்.

மரண ஓலை எழுதப்பட்டு, பின்னர் உயிர் பிழைத்து வரும் நாயகர்களாக உலகில் இரண்டு பேர்   உள்ளனர். ஒருவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். இரும்புத்திரை நாட்டை தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பவர்.

கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து அவ்வப்போது ஊடகங்களில் செய்தி வரும். ‘அவர் கவலைக்கிடமாக இருக்கிறார். இறந்து போனார்என்று கூட செய்திகள் வந்தன.கொஞ்சநாள் கழித்து ஏதாவது ஒரு ராணுவ நிகழ்ச்சியில் முகம் காட்டி, தான் உயிருடன் இருப்பதை நிரூபித்து விட்டு, காணாமல் போவார்.

இருக்கிறாரா? இல்லையா?’ என உலகத்தை தவிக்க வைக்கும் மற்றொருவர்விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன்.

30 ஆண்டுகளாகவே அவர் குறித்த வதந்திகளுக்கு பஞ்சமில்லை.

பிரபாகரன் மரணம் அடைந்து விட்டார். அவர் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த நீண்ட கியூவில் காத்து நிற்கின்றனர்என செய்திகள் வந்ததுண்டு.கொஞ்சநாள் கழித்து,தனது மரணச்செய்தியை படித்த படி அவர் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்த சமயத்தில் 2009 –ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி அங்குள்ள ராணுவம்பிரபாகரன் கொல்லப்பட்டார்என அறிவித்தது. சிதிலம் அடைந்த நிலையில்அவரது சடலத்தையும், வெளியிட்டதால் அது உண்மை என்றே உலகம் நம்பியது.

இந்தப்போரில் பிரபாகரன் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன்கள் சார்லஸ் அந்தோணி, பாலச்சந்திரன் ஆகியோரும் உயிர் இழந்ததாக ராணுவம் சொன்னது.

எல்லோருமே நம்பினர்.

அடுத்த ஆண்டு இலங்கையின் இணையதளம் ஒன்றுபிரபாகரன் சாகவில்லை. பிரபாகரன் போன்ற உருவத்தோற்றம் கொண்ட சிங்கள வீரர் சடலத்தைக்காட்டி, பிரபாகரன் என ராணுவம் பொய் சொல்கிறதுஎன செய்தி வெளியிட்டது.

உச்சக்கட்டமாக பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரிய பழ.நெடுமாறன் கடந்த பிப்ரவரி மாதம்பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்என கொளுத்திப்போட .உலக தமிழர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இதனை இலங்கை ராணுவம் மறுத்தது.

பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என்ற சர்ச்சை ஓயாத நிலையில் அவரது மனைவி மதிவதனியும் , மகள் துவாரகாவும் உயிருடன் உள்ளதாக இப்போது  தகவல் வெளியாகியுள்ளது.

இதனை சொல்பவர், மதிவதனியின் அக்காள் தாரகா என்பதால்,செய்தியில் ஒரு நம்பகத்தன்மை உள்ளதாகவே கருதப்படுகிறது.

தாரகா இப்போது டென்மார்க்கில் வசித்து வருகிறார்.அங்கிருந்து தாரகா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:

நான் தாரகா பேசுகிறேன். என் தந்தை ஏரம்பு.தாய், சின்னம்மா. நாங்கள் பூங்கொடியை பூர்வீகமாக கொண்டவர்கள்.எனது தங்கை மதிவதனியும், அவர் மகள் துவாரகாவும் உயிருடன் தான் உள்ளனர்.அவர்களை சந்தித்துப் பேசி , உணவு அருந்தினேன்.இந்த செய்தியை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.’ என வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கம் போல் இதனை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது.

எனினும் பிரபாகரன் மனைவியும் மகளும் உயிருடன் இருப்பதாக ரத்த சொந்தமே கூறி உள்ளதால் ஈழ ஆர்வலர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்,

இருவரையும் தாரகா எங்கே ? எப்போது சந்தித்தார் என்பது தெரியவில்லை. அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் இந்த விவரங்களை தாரகா ரகசியமாக வைத்துள்ளதாக தெரிகிறது.

எனினும் மதிவதனியின் இருப்பிடம் குறித்து ஊடகங்கள் துப்பு துலக்கி வருகின்றன.இருவரும் உயிருடன் இருக்கும் பட்சத்தில் , அந்த தகவல்கள் விரைவிலேயே வெளிச்சத்துக்கு வரும்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *