‘பாகுபலி’ படம் மூலம் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அவருக்கு இப்போது 45 வயதாகிறது.
இன்னும் திருமணம் செய்யவில்லை.
பாகுபலி படத்தில் நடித்தபோது, நடிகை அனுஷ்காவுடன் காதல் ஏற்பட்டது.அதற்கு பிரபாசின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்ய உள்ளதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்னர் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.
விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்.
இந்த தகவலை கேட்டு அனுஷ்கா அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் பிரபாஸ் குடும்பத்தார், நிச்சயதார்த்த செய்திகளை மறுத்துள்ளனர்.
கல்கி படத்தை முடித்து விட்டு, ராஜா சாப் படத்தில் நடித்து வரும் பிரபாஸ் கைவசம் ,ஸ்பிரிட், பாஜி, கல்கி -2 உள்ளிட்ட படங்கள் உள்ளன.
—