‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாசுடன் நம்ம ஊர் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ளார்.
தெலுங்கு திரை உலகில் இன்றைய தினம் மிகவும் ‘பிஸி’யாக இருக்கும் நடிகர் பிரபாஸ்.இப்போது அவர் ‘தி ராஜா சாப்’என்ற படத்தில் நடித்து வருகிறார். பாவ்ஜி, ஸ்பிரிட், கண்ணப்பன், கல்கி -2,சலார் -2 ஆகிய படங்களையும் பிரபாஸ் கையில் வைத்துள்ளார்.
கண்ணப்பன் படத்தில் அவருக்கு கவுரவ வேடம்.
‘தி ராஜா சாப்’ படத்தை முடித்து விட்டு,பிரபாஸ் ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க உள்ளார். இதில் பிரபாசுடன் இணைந்து நடிக்கவிருப்பவர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய கதாபாத்திரங்களில் இந்தி நடிகர் சஞ்சய் தத்தும் ,நம்ம ஊர் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளனர். இருவரிடமும் பேச்சு வார்த்தை நடந்து முடிந்து விட்டது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
இதனிடையே ராஜமவுலி –மகேஷ்பாபு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் கசிந்த நிலையில், இப்போது பிரபாசின் ‘ராஜா சாப்’படத்தின் காட்சிகளும் இணையத்தில்’லீக்’ஆகி உள்ளது.
பிரபாஸ் ‘டான்ஸ்’ ஆடும் காட்சியும், கதாநாயகி மாளவிகா மோகனன் வில்லன் கும்பலுடன் ஆக்ரோஷமாக மோதும் காட்சியும் கசிந்துள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
–