டிசம்பர்-29.
இந்தியாவின் மிகப் பெரிய ஆறுகளில் ஒன்றான பிரம்மப்புத்திரா மீது உலகத்தின் மிக்பெரிய அணையை சீனா கட்ட இருப்பது நாட்டின் வடகிழக்கு மாநில மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
சீனா நாட்டின் திபெத் பீட பூமியில் கயிலாய மலையில் புறப்படும் இந்த ஆற்றுக்கு அங்கு ஸாங்- பே என்று பெயா். அருணாசலப் பிரேதசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த உடன் இதற்கு பெயர் பிரம்மபுத்திரா. அங்கிருந்து அசாம் மாநிலம் வழியாக பாய்ந்து வங்கதேசத்தில் கடலில் கலக்கிறது.
ஆற்றன் நீளம் 2800 கிலோ மீட்டர் ஆகும். விநாடிக்கு ஏழு லட்சம் கன அடி தண்ணீரை கடலுக்கு கொண்டு போகக் கூடியது.
பிரமம்மபுத்திரா மீது 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்டமான அணையைக் கட்டுவதற்கு சீனா முடிவு செய்து இதற்கான அறிவிப்பை கடநத் புதன் கிழமை வெளியிட்டு உள்ளது. இந்த அணை கட்டி முடிக்கப்படும் போது உலகத்திலயே இது தான் மிகப்பெரிய அணையாக இருக்கும்.
பிரம்மப்புத்திரா ஆற்றில் சுமார் 50 கிலோ மீட்டர் நீளத்திற்கு மிக உயரமான நீர் வீழ்ச்சிகள் உள்ளன. சில இடங்கில் இரண்டு கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து கூட தண்ணீ்ர் கொட்டுகிறது. இவற்றின் மூலம் ஏறத்தாழ 70 மில்லியன் கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதன் வழியாக சீனாவுக்கு ஆண்டுக்கு ரூ 25 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.
இந்தியா தரப்பில இந்த அணை கட்டுவதற்கு பெரும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அணை கட்டப்படும் திபெத் பீடபூமி நில நடுக்க ஆபத்து கொண்டதாகும். எனவே ஆபத்தை விலை கொடுத்து வாங்கவேண்டாம் என்கிறது இந்தியா.
அணை கட்டப்பட்ட பிறகு பிரமத்திரா ஆறு முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். அங்கு திறந்து விட்டால்தான் இந்தியாவுக்கு தண்ணீர் வரும். இப்போது பிரம்மபுத்திரா தண்ணீரை நம்பிதன் அருணாசலம் மற்றும் அசாம் மாநிலங்கள் உள்ளன.
கடந்த 2015- ஆம் ஆண்டில் செம்பராம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதால் அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்து சென்னை வெள்ளக் காடானது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
அது போல புதிதாக கட்டப்படும் அணையில் இருந்து அதிக தண்ணீரை ஒரே நாளில் சீனா திறந்துவிட்டால் வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
இது பற்றி வெள்ளிக் கிழமை பெய்ஜிங்கில் பேட்டி அளித்த சீன வெளியறவுத் துறை அதிகாரி மாவோ நிங், கடந்த பல ஆண்டுகளாக அங்கு தீவிர ஆய்வுகளை நடத்தி அணையின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்து கொண்டே பிறகு அணை கட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.
அணை கட்டுவதால் இந்தியாவும் வங்க தேசமும் கொண்டுள்ள கவலைப் பற்றி பேசிய மாவோ நிங், ஆற்றின் கடை மடையில் உள்ள நாடுகளை இது பாதிக்காது. அங்கு வசிக்கும் மக்களின் நலனுக்கும் பேரிடர் கால பாதுகாப்புக்கும் அணை அரணாக திகழும் என்று கூறியுள்ளார்.
சீனா சொல்வதை நம்ப முடியுமா என்பதுதான் கேள்வி.
*