ஆகஸ்டு, 31-
பீகார் மாநில முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் பதவி வகித்து வருகிறார். லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி.கட்சியும் , காங்கிரசும் இந்த கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன.
பீகார் மாநில பள்ளிக்கல்வித்துறை, அரசு பள்ளிகளின் விடுமுறை நாட்களை குறைத்து வெளியிட்டுள்ள அறிவிப்பு அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து பண்டிகைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த விடுமுறை நாட்கள் கணிசாமாக குறைக்கப்பட்டிருப்பதே இதற்கான காரணம்.
நடப்பு ஆண்டில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களில் மொத்தம் 23 நாட்கள் விடுமுறை உண்டு.ஆனால் அதனை 11 நாட்களாக குறைத்து விட்டது,
பள்ளிக்கல்வித்துறை. துர்கா பூஜைக்கு பீகாரில் 6 நாட்கள் விடுமுறை இருந்தது. இப்போது 3 நாட்களாககுறைக்கப்பட்டுள்ளது.ரக்ஷாபந்தன்,ஜனமாஷ்டமி ,குருநானக் ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் விடுமுறை தினங்களாக இருந்தன.இந்த விடுமுறைகள் மொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
‘1 ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை 200 நாட்களும், 6-ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை 220 நாட்களும் செயல்பட வேண்டும்- அரசாங்க பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த இந்த உத்தரவு பிறக்கப்படுகிறது’ என அரசாங்க ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் அரசின் இந்த முடிவுக்கு பாஜகவும், பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.’’இந்து பண்டிகை விடுமுறை நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது,கண்டனத்துக்குரியது-பீகாரில் ஒருநாள் ஷரியத் சட்டம் கூட அமல்படுத்தப்படலாம்’என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ,கோபத்துடன் கருத்து பதிவிட்டுள்ளார்.
000