தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவதாஸ் மீனாவும் சென்னை மாநகர காவல் துறை தலைவராக பதவி வகித்து வந்து சங்கர் ஜிவால் மாநில டி.ஜி.பி.யாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல், தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பும் டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபுவும் ஓய்வு பெறுவதை அடுத்து இந்த நியமனங்கள் நடைபெற்று உள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த சிவ்தாஸ் மீனா, 1989-ல் தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார். 2016-ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அவரது செயலாளர்களில் ஒருவராக இருந்தார்.காஞ்சிபுரத்தில் உதவி ஆட்சியராக பணியை தொடங்கியவர்.நாகை ஆட்சியராகவும் பணியாற்றினார்.
போக்குவரத்து, கூட்டுறவு, சுகாதாரம், மின்சாரம் என பல்வேறு துறைகளில் பணியாற்றிவர் சிவ்தாஸ் மீனா.உ நகராட்சி நிர்வாகம் – நீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
புதிய டிஜிபி.
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியா நியமிக்கப்பட்டு இருக்கும் சங்கர் ஜிவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை பெருநகர காவல் துறை தலைவராக பணியாற்றியவர்.
ஜிவால் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டதை அடுத்த அவர் வகித்து வந்த சென்னை மாநகர காவல் துறை ஆணையர் பதவிக்கு சந்தீப் ராய் ரத்தேர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் ஆவடி காவல் ஆணையராக கடந்த இரண்டு ஆண்டுகளா பதவி வகித்து வந்தார்.
தலைமைச் செயலர் பதவியில் இருந்து இறையன்பும் டி.ஜி.பி. பதவியில் இருந்து சைலேந்திர பாபுவும் ஜுன் 30 -ஆம் தேதியான வெள்ளிக் கிழமை மாலை ஓய்வு பெறுகிறார்கள்.
000