டிசம்பர்-1.
பெஞ்சல் புயலால் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதே போன்று விழுப்புரம் மாவட்டத்திற்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாவட்டத்தில் திண்டிவனத்தை அடுத்து உள்ள மயிலத்தில் நேற்று ஒரே நாளில் 50 சென்டி மீட்டர் மழைக் கொட்டித் தீர்த்தது. இதுதான் நடப்பாண்டில் ஒரே நாளில் பெய்த அதிக மழையாகும். இதனால் மயிலத்தைச் சுற்றி உள்ள கிராமங்களையும் மரக்காணத்தைச் சுற்றி இருக்கும் உப்பளங்களையும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி நகரம் மற்று அதனைச் சுற்றி உள்ள ஊர்களில் நேற்று ஒரே நாளில் 40 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. கன மழையை அடுத்து புதுச்சேரி நகரத்தின் பல இடங்களில் தேங்கிய தண்ணீர் வடியவில்லை. மீட்புப் பணிகளில் ராணுவத்தையும் புதுச்சேரி மாநில அரசு பயன்படுத்தி உள்ளது.
*