நவம்பர்- 29,
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் புயலாக மாறி நாளை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
காரைக்கால்-மாமல்லபுரம் இடையே பெங்கால் புயல் நாளை (நவ.30) மதியம் கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் .
புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அழுத்தம் பெற்று புயலாக மாற உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் நாளை (நவ.30) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.
*