ஆயிரம் ஏற்பாடுகள் செய்தாலும் சென்னையில் சில்லைறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ 140 வரை தான் விற்கப்படுகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையிலும் தக்காளி மொத்த விலையில் மாற்றம் எதுவுமில்லை. அங்கு மொத்த வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ 110 ஆக இருக்கிறது.
மூன்று நாட்களுக்கு முன்பு மொத்த வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ 90 ஆக இருந்தது. அதோடு 20 ரூபாய் கூடி 110 க்கு வந்த விலை அப்படியே நீடிக்கிறது.
ஆனால் சின்ன வெங்காயத்தின் விலையில் லோசன குறைவு நிலவுகிறது. அதன் விலையில் ரூ 20 குறைந்து கிலோ 200 ரூபாய் என்ற நிலைக்கு வந்து இருக்கிறது
இதே நேரத்தில் பூண்டு விலை கிலோ 210 ரூ பாய் என்ற விலைக்கு விற்கப்படுகிறது.
திருச்சியில் செய்திளார்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சம் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தக்காளி விலை குறைவு என்று தெரிவித்து உள்ளார்.
வட மாநிலங்களில் பெய்துவரும் அதிகளவு மழை காரணமாக தக்காளி விலை உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசு இந்த விலை உயர்வை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் தக்காளி விலை குறைவாகவே உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
000