ஜுலை, 20-
கடந்த மூன்று மாதங்களாக கலவரம் நிகழும் மணிப்பூர் மாநிலத்தில் மூன்று பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அவர்களை ஒரு கும்பல் ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ காட்சி வலைதளங்களில் வெளியாகி நாட்டையே அதிரச் செய்து கொண்டிருக்கிறது.
அந்த மாநிலத்தில் கடந்த மே மாதம் 3- ஆம் தேதி முதல் குக்கி மற்றும் மோத்யா சமூகத்திடையே மோதல்கள் நிகழ்ந்து வந்தாலும் பாலியல் வன்முறை தொடர்பான முக்கியமான குற்றச்சாட்டு இதுவாகும்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி நேற்று ( புதன்கிழமை) சமூக ஊடகங்களில் வெளிவந்தது. அந்தக் காட்சியில் இரண்டு பெண்கள் காணப்படுகின்றனர்.
கலவரம் மூண்டதற்கும் மறு நாளான மே 4- ஆம் தேதி அன்று காங்போக்பி மாவட்டத்தில் உள்ள தங்கள் கிராமத்தைத் தாக்கிய வன்முறைக் கும்பலிடமிருந்து இந்தப் பெண்கள் தப்பிக்க முயன்று உள்ளனர். அப்போது இந்த கொடுமை நடந்து உள்ளது.
இந்த மூன்று பெண்களில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலிஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யபப்ட்டு உள்ளது. ஆனால் அந்த பெண்ணின் தந்தையும் சகோதரரும் கும்பலால் கொல்லப்பட்டுவிட்டனர். 19 வயதுடைய அந்த சகோதரர், தனது சகோதரியை வன்முறைக் கும்பலிடம் இருந்து பாதுகாக்க முயன்றபோது கொல்லப்பட்டதாக புகாரின் கூறப்பட்டுள்ளது. போலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ள முதல் தகவல் அறிக்கையில் கொலைக் குற்றச்சாட்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
மே 4- ஆம் தேதி அன்று கிராமத்தைச் சூழ்ந்த வன்முறைக் கும்பலிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் காட்டை நோக்கி ஓடியதாகவும் , அவர்களை உடனே காவல்துறை மீட்டதாககவும எப்.ஐ.ஆர். ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், 1,000 பேர் கொண்ட கும்பல், அதிநவீன ஆயுதங்களை ஏந்தியபடி, போலீஸ் குழுவைத் தடுத்து, ஐந்து பேரையும் காவல்துறையின் காவலில் இருந்து பறித்துச் சென்றதாகவும் அந்த எப்.ஐ.ஆர்.ல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த எஃப்.ஐ.ஆ. பதிவு செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகிறது, ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
போலிஸ் பிடியிலிருந்து மீட்டுக் கொண்டு செல்லப்பட்ட பெண்களின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இதனை தடுக்க முயன்ற ஒரு பெண்ணின் சகோதரர் கொல்லப்பட்டு உள்ளார். தாக்குதலு ஆளான அவரது தந்தையும் பின்னர் இறந்துப் போனார். நிர்வாண ஊர்வலத்தை வன்முறைக் கும்பலைச் சேர்ந்த ஒருவனே வீடியே எடுத்து உள்ளான். அது இப்போது வெளியாகி நாட்டையே அதிரச் செய்து இருக்கிறது.
மணிப்பூர் சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நோட்டீஸ் தரப்பட்டு உள்ளது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் நடந்து வரும் கலவரத்தில் 140 பேர் இருந்துவிட்டனர்.10 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். எதிர்கட்சிகள் பல முறை கேட்டும் பிரதமர் மணிப்பூர் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தார். அவர், இந்த வீடியோ காட்சி வெளியானதை அடுத்து மணிப்பூர் பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார்.அவர், “மணிப்பூர் சம்பவம் வெட்கக் கேடானது,பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுக்க வேண்டும். அங்கு பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை மன்னிக்க முடியாத குற்றமாகும். இதற்கு காரணமான குற்றவாளிளை தப்ப விடமாட்டோம்” என்று தெரிவித்து இருக்கிறார்.
உச்சநீதிமன்றத்திலும் இந்த பிரச்சினை எதிரொலித்தது. தலைமை நீதிபதி சந்திரசூட், தமது வேதனையை மத்திய அரசு வழக்கறிஞரிடம் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றத்திடம் விளக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும் மணிப்பூர் அரசுக்கும் தெரிவித்த தலைமை நீதிபதி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
000