பென்சில் முனையில் “மாஸ்க்”..! மாஸ் காட்டிய கோவை ஆட்டோ ஓட்டுனர்..!!

ஏப்ரல்.25

கோவையில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படும் வகையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பென்சில் முனையில் முகக்கவசத்தை செதுக்கியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கோவை காந்திபார்க் பகுதியில் பென்சில் முனையில் முகக்கவசம் போன்ற சிற்பம் செதுக்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜ். ஆட்டோ ஓட்டுனரான இவர், கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், பென்சில் முனையில், முகக்கவச வடிவத்தையும் அதன் கீழ் WEAR MASK என்ற வார்த்தைகளையும் செதுக்கியுள்ளார்.

முகக்கவசம் அணிவது கட்டாயம் என அவரது ஆட்டோவில் ஏறும் அனைத்து பயணிகளுக்கும் வலியுறுத்தியும் வருகிறார். மேலும், முகக்கவசம் இல்லாமல் அவரது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவசமாக முகக்கவசங்களையும் வழங்கி வருகிறார். இவர் இதேபோன்று பென்சில் முனையில் விலங்குகள், மனிதர்கள், பெயர்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களை செதுக்கியுள்ளார். மேலும் அவரது ஆட்டோவில் வைக்கப்பட்டுள்ள I LOVE AUTO என்ற மினி கிராஃப்ட் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *