ஜனவரி-1.
உலக மாக பணக்காரரான எலான் மஸ்க் அவருடைய பெயரை எக்ஸ் வலை தளத்தில் மாற்றி இருப்பது புத்தாண்டு நாளில் அனைவரையும் கவனிக்கச் செய்து உள்ளது.
டெஸ்லா கார் நிறுவனத்தின் உரிமையாளர், வான் வெளி ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சொந்தக்காரர், எக்ஸ் (டுவிட்டர் )நிறுவனத்தின் அதிபதி என பல அடையாளங்களை கொண்ட எலான் மஸ்க் நடந்த முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பை தீவிரமாக ஆதரித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். தேர்தலில் வெற்றி பெற்று இன்னும் சில நாட்களில் அதிபர் பதவியை எற்க இருக்கும் டிரம்ப் தமது அரசின் ஆலோசகராக மஸ்க் இருப்பார் என்று கூறி தமது நட்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்த சூழலில் எலான் மஸ்க் புத்தாண்டின் முதல் நாளில் தனது பெயரை X வலை தளத்தில் ‘Kekius Maximus’ என்று மாற்றி இருக்கிறார். இது அந்த வலைதளத்தில் அவரை பின் தொடரும் 21 கோடி பேரை பெரும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
கியிக்கிஸ் மேக்ஸிம்ஸ் என்ற பெயர் கிறிப்டோ கரன்சி உலகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெயர் மாற்றம் நிரந்தரமானதா அல்லது மாற்றத்திற்கான காரணம் போன்றவற்றை எலான் மஸ்க் விளக்கவில்லை.
ஏற்கனவே டுவிட்டர் என்ற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருந்த வலை தளத்தை வாங்கிய எலான் மஸ்க் அதன் பெயரை X என்று மாற்றியது குறிப்பிடத் தக்கது.எல
பெயரை மட்டும் மாற்றுவதோடு நிற்காமல் Pepe the Frog என்ற பிரசித்திப் பெற்ற கார்டூன் பாத்திரத்தின் படத்ததையும் பகிர்ந்து இருக்கிறார்.
என்ன காரணம் என்று அறியாமல் பலரும் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
***