பெரிய நடிகர்களுக்கு கை தட்டும் தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள்- ராதா ரவி ஆவேசம்.

ஆகஸ்டு,01-

நடிகர் டேனியல் ஆனி போப் ‘பொல்லாதவன்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார்.

‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் விஜய் சேதுபதிக்கு நண்பராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் கவனம் பெற்றார். டேனியல் ஆனி போப்,’ டேனிஸ் தியேட்டர் ஸ்டுடியோ’ எனும் நடிப்புப் பயிற்சிப் பட்டறையை ஆரம்பித்துள்ளார்.

இதில் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்ட  நடிகர் ராதாரவிக்கு , வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசியதாவது:

“ஆடியோ வெளியீட்டு விழாவிற்கெல்லாம் என்னை அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். நான் ஏதாவது ஏடாகூடமாகப் பேசுவேன், அதனால் பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்காக அழைக்கிறார்கள் .

நான் ஏடாகூடமாப் பேசமாட்டேன். உள்ளதைச் சொல்வேன், நான் உள்ளதை சொல்வது உங்களுக்கு ஏடாகூடமாகத் தெரிகிறது. “டேய் நீ என்ன நல்லவனா..?” என்று மேடையில் நான் யாரையாவது  கேட்டால், பத்திரிகையில்  பெரிய செய்தியாக போடுவார்கள்.

வசீகரமான தலைப்பு வைத்து வரும் எந்த வீடியோக்களையும் நான் பார்ப்பது இல்லை.

நீங்கள் எல்லாம் இது போன்ற சிறுசிறு அமைப்புகளின் செயல்பாடுகளை ஆதரித்து ஊக்குவிக்க வேண்டும். இவர்களில் யாராவது எதிர்காலத்தில் எம்.ஜி.ஆர். ஆகவோ, சிவாஜியாகவோ வரலாம். இல்லை. காதல் மன்னனாகவோ வரலாம். எல்லோரும் பெரிய  நிகழ்வுகளுக்குத் தான் வருவோம் என்ற எண்ணத்தில் இருக்கக்கூடாது. ஒரு நாள் பெரிய இடம் சின்ன இடமாக மாறும், சின்ன இடம் பெரிய இடமாக மாறும். இதுதான் வாழ்க்கை.

ராதாரவி என்றால் கெட்ட வார்த்தையில் பேசுவார் என்று ஒரு கருத்து பரவுகிறது. நான் கெட்ட வார்த்தையில் பேசக் கூடாது என்கிற திடகாத்திரமான முடிவோடு தான் வந்தேன். கோபம் வந்தால் எதைப் பற்றியும் பயப்படமாட்டேன், எனக்கு தோன்றியதைப் பேசிவிடுவேன். ஆனால் இங்கு நான் கோபப்படும் படி எதுவுமே இல்லை. இந்த நடிகர்களுக்கு அவர்களின் நிலை உயர்ந்துவிட்டால் எங்கிருந்து தான் இப்படிப்பட்ட எண்ணங்கள் வருமோ தெரியவில்லை. ஆனால் அவர்கள் பேசும் அந்தப் பேச்சையும் கைதட்டி ரசிக்கத் தானே செய்கிறார்கள் மக்கள்.

தமிழ்நாட்டு மக்கள் போல் முட்டாள்கள் வேறெங்கும் கிடையாது. இதை தைரியமாகத் தான் சொல்கிறேன். வேண்டுமென்றால் என் படங்களைப் பார்க்காமல் தவிர்த்து விடுங்கள்.

என்னைச் சார்ந்து படங்கள் எடுக்கப்படுவதில்லை. ஹீரோவைச் சார்ந்து எடுக்கப்படும் படங்களில் நான் இருக்கிறேன்.’’

இவ்வாறு மனதில் பட்டதை பேசி பார்வையாளர்களின் கைதட்டலை அள்ளிக்கொண்டார், ராதாரவி.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *