பேட்ட’ டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் ,ரஜினிகாந்துடன் மீண்டும் இணைய உள்ளார்.
தொடர் தோல்விகளை கொடுத்து வந்த ‘சூப்பர்ஸ்டார்’ரஜினி காந்துக்கு மிகப்பெரிய வெற்றியை தந்த படம் ‘பேட்ட’.
இதனை ரஜினியின் ரசிகரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப்படம் 2019 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் திரைக்கு வந்தது. படம் அமோக வெற்றி பெற்றது.
அதன் பிறகு இளம் இயக்குநர்களுடன் ரஜினி கூட்டணி அமைத்தாலும் மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் உடன் கூட்டணி அமைக்கவில்லை.
ரஜினிகாந்த், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் ‘ஜெயிலர் – இரண்டாம் பாகம் படத்திலும் சில நாட்களாக நடித்து வருகிறார்.
இரண்டுமே சன் பிக்சர்ஸ் படங்கள்.
இதனிடையே, கார்த்திக் சுப்பராஜ் அண்மையில் ரஜினியை சந்தித்து ஒரு கதையைச் சொல்லி உள்ளார். அந்தக் கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போனது. ஓகே சொல்லிவிட்டார்.
‘ஜெயிலர் -2 ‘ஷுட்டிங்’ முடிந்ததும் , ‘பேட்ட’ கூட்டணியின் ஆட்டம் ஆரம்பம் ஆகும்.
இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
—