பேரனுக்கு பெயர் சூட்ட கோவைக்கு பறந்த ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் தயாராகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இது, கிரிக்கெட்டை கதைக்களமாக கொண்ட படம். விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கிரிகெட் வீரர் கபில்தேவும் சில காட்சிகளில் வருகிறார். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்., ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கதாபாத்திரத்துக்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.

இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
டப்பிங் பணிகளை முடித்த கையோடு, ரஜினிகாந்த் கோவை பறந்து விட்டார்.அவரது 2-வது மகள் சௌந்தர்யா மற்றும் விசாகன் தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. சௌந்தர்யாவின் கணவர் விசாகனின் சொந்த ஊர் கோவை மாவட்டம் சூலூர் .

குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் ரஜினிகாந்த் கோவைக்கு சென்றார்.விமான நிலையத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

-பாரதி.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *