ஜனவரி-1,
முன்னொரு காலத்தில் தீபாவளி, பொங்கல் பண்டிகை என்றால் , கொத்து கொத்தாக தமிழ்நாட்டில் சினிமாக்கள் ரிலீஸ் ஆகும்.அது –ஒரு கனாக்காலமாகி விட்டது.
இப்போது ஒன்றிரண்டு படங்களே வெளியாகின்றன.அதுவும், பெரிய நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமே.
இந்த பொங்கலுக்கு மூன்று படங்கள் வெளிவருவதாக இருந்தது.
அஜித்தின் ‘விடாமுயற்சி’, பாலாவின் ‘வணங்கான்’ மற்றும் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களே அவை.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள விடாமுயற்சியை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். அஜித்துடன் , அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில் நிறைய பணத்தை கொட்டியுள்ளது, லைகா
விடாமுயற்சி ‘ பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , கைகா நிறுவனம் சகா வாங்கி விட்டது.
‘தவிர்க்க இயலாத காரணங்களால் விடாமுயற்சி பொங்கலுக்கு வரவில்லை’ என அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
இன்றைய தேதியில் வணங்கான் , கேம் சேஞ்சர் வருவது உறுதியாகி விட்டது.
இதில் வணங்கான் மட்டுமே நேரடி தமிழ்ப்படம். கேம் சேஞ்சர் தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழில் ‘டப்’செய்யப்பட்டுள்ளது.
தொடர் தோல்விகளை கொடுத்த பாலாவுக்கும் , இந்தியன் -2 வில் சறுக்கிய ஷங்கருக்கும் , இந்த பொங்கல் தை பொங்கல் அல்ல.
‘திக் திக்’ பொங்கல்..
—