பொன்னியின் செல்வன் வசூலை முறியடித்து விட்டதா மாமன்னன் ?

பரி ஏறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டே படங்களை இயக்கியதன் மூலம், தன்னை அடையாளம் காட்டி கொண்ட  படைப்பாளி    மாரி செல்வராஜ்.அடுத்து அவர் இயக்கியுள்ள படம் ‘மாமன்னன்’.உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். உதயநிதியின் ரெட்ஜெயண்ட்  மூவீஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.படம் உருவாகும் போது வெறும் நடிகராக இருந்த உதயநிதி, படம் முடிவடையும் போது அமைச்சராக உயர்ந்திருந்தார்.

பட வெளியீட்டுக்கு முன்பாக பேசிய உதயநிதி,’இது எனது கடைசி படம்’ என அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் மாமன்னனுக்காக காத்திருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை பக்ரீத் அன்று படம் வெளியானது. தமிழகம் முழுவதும் சுமார் 700 திரையரங்குகளில் மாமன்னன், ரிலீஸ் செய்யப்பட்டது.ரஜினி, விஜய், அஜித் ஆகிய மூன்று பேர் படங்கள் மட்டுமே, இத்தனை அதிகமான திரைகளில் இதுவரை வெளியிடப்பட்டு வந்தன.

உச்ச நட்சத்திரங்களுக்கு நிகராக உதயநிதியின் படமும் ரிலீஸ் ஆனதால் அவரது ரசிகர்கள் ஆனந்தக்கூத்தாடினர். ’பொன்னியின் செல்வன் -1’ படத்தின் முதல்நாள் வசூலை மாமன்னன் படத்தின்  முதல் நாள் வசூல் முறியடித்து விட்டதாக கோடம்பாக்கத்தில் முரசு கொட்டுகிறார்கள். முதல் நாளில் மட்டும் மாமன்னன் 10 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்.

இது எப்படி சாத்தியம்?

தமிழ் சினிமாவின் வர்த்தக விவரங்களை கவனிக்கும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சொன்ன ரகசியம் இது:

‘தனது ரெட்ஜெயண்ட் தயாரித்த ஆதவன் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருப்பார், உதயநிதி.அவர் கதாநாயகனாக நடித்த முதல்படம்’ ஒரு கல் ஒரு கண்ணாடி’.(ஓகே ஓகே).உதயநிதியின் படங்களிலேயே அதிக வசூல் குவித்த படம் அது.அதன்பின் உதயநிதி நடித்து நெஞ்சுக்கு நீதி, நண்பேண்டா, சைக்கோ, இது கதிர்வேலன் காதல் உள்ளிட்ட பல படங்கள் வந்தன. ஓகே ஓகே வசூலை அவை தொடமுடியவில்லை.

’நான் எப்படி வெற்றி ஹீரோவாக கோடம்பாக்கத்தில் நுழைந்தேனோ அப்படியே எனது கடைசி படத்திலும் வசூல் நாயகனாக விடைபெற வேண்டும்’ என உதயநிதி முடிவு செய்தார், மாமன்னன்  மூலம் அதனை நடத்திக்காட்டினார்.

வழக்கமாக தமிழகத்தில் வியாழக்கிழமை தோறும் மூன்று அல்லது நான்கு தமிழ்படங்கள் ரிலீஸ் ஆகும்.ஆனால் மாமன்னன் ரிலீஸ் ஆன போது எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. அன்று விடுமுறை நாள் வேறு. கூட்டிக்கழித்து பார்த்தால் வசூல் காரணம் புரியவரும்’ என்று சொல்கிறார் அந்த பத்திரிகையாளர்.

வியாழன்று வெளியாக இருந்த வேறு சில படங்களின் வெளியீட்டு தேதி மாமன்னனுக்காக மாற்றப்பட்டது தனிக்கதை.

படத்தின் வசூல் குறித்து எதிர்மறை விமர்சனங்கள்இருந்தாலும், மாமன்னன் -ஆரோக்கியமான திரைப்படமாகவே பல தரப்பிலும் கொண்டாடப்படுகிறது என்பதே உண்மை/

  • சினி மேன்

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *