அமைச்சர் பொன்முடி மீதான சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் மேலும் 5 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.
செம்மண் குவாரிகளை பொன்முடி தனது பினாமிகளுக்கு ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்பது வழக்காகும்.இது தொடர்பாக பொன்முடி, மகன் கவுதம சிகாமணி, திமுக நிர்வாகிகள் கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 போ் மீது கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்களில் பொன்முடி மற்றும் அவருடைய மகன் கவுதம சிகாமணி ஆகியோர் தொடர்புடைய 7 இடங்களில் கடந்த திங்கள் கிழமை அன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இதை அடுத்து வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ள மற்ற 5 பேருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.
செம்மண்ணை சட்டவிரோதமாக எடுத்து விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை பல்வேறு பணத்தை இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் முதலீடு செய்துள்ளனர் என்பது அமலாக்கத் துறையின் புகாராகும். பிறகு அந்த பணம் ஹவாலா முறையில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது என்பதும் குற்றச்சாட்டாகும்.
000