சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,,
தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை2,29,175. அதில் பதிவுக் கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 847.கடந்த ஆண்டை விட 18 ஆயிரத்து 767 பேர் அதாவது 11.09% கூடுதலாக விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பு களுக்காக வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில் 102 பேர் 200 க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ளனர். இவர்களில்100 மாணவர்கள் தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் படித்தவர்கள்..
பொறியியல் படிப்புகளுக்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களில் யாருடைய பெயராவது தரவரிசை பட்டியலில் விடுபட்டு இருந்தால் அவர்கள் அடுத்த ஐந்து நாட்களுக்குள் அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையத்தினை அணுகி தங்கள் குறைகளுக்குத் தீர்வு காணலாம். தரவரிசை பட்டியலில் ஆண்கள் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 384 பேர், பெண்கள் 72 ஆயிரத்து 558 பேர், மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 17 பேர் ஆவர். பொறியியல் தரவரிசை பட்டியலில் மொத்தம் முதல் மூன்று இடங்களை மாணவிகளே பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் தர்மபுரியை சேர்ந்த மாணவி மகாலட்சுமி முதலிடத்தையும் நாகப்பட்டினத்தை சேர்ந்த மாணவி நிவேதிதா இரண்டாது இடத்தையும் கோயம்புத்தூரை சேர்ந்த மாணவர் சரவணகுமார் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர வேண்டும் என்றால் கணித பாடத்தை கட்டாயம் பயின்று இருக்க வேண்டும் . AICTE விதிமுறைகள் மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் வேண்டுமானால் பொருந்தும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் கணிதப் பாடப்பிரிவை பயின்றிருந்தால் மட்டுமே பொறியியல் பாடப் பிரிவில் சேர முடியும்.
இவ்வாறு பொன்முடி தெரிவித்தார்.
இந்த பேட்டியின் போது தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த தூத்துக்குடி மாணவியின் பெயரை நேரா என கூறினார். பெயரை மீண்டும் தெரிவிக்குமாறு செய்தியாளர்கள் கேட்ட போது மீண்டும் மீண்டும் நேரா என்றார். அருகில் இருந்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்,மாணவியின் பெயர் நேத்ரா என்று தெரிவித்தார்.
அதேபோல அரசு பள்ளிகளில் படித்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளின் பெயர்களை வாசிக்கும் போது மகாலட்சுமி, தர்மபுரி, சகாதேவ வாத்தியார் தெருவைச் சேர்ந்த மாணவி என்று சொல்வதற்க பதிலாக மகாலட்சுமி, சைதாப்பேட்டையை சேர்ந்தவர் என்று தெரிவித்தார்.
நேத்ராவை, நேரா எனவும் சகாதேவ வாத்தியார் தெருவை சைதாப்பேட்டை எனவும் அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பில் மாற்றி மாற்றி சொன்னது குழப்பத்தை ஏற்படுத்தியது.
000