வாட்ச் பிரச்சினை, சொத்து பட்டியல், ஊழல் பட்டியல், கட்சிக்குள் பங்காளிகள் சண்டை என தமிழ்நாடு அரசியல்களம் படுபிஸியாக பயணித்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தனது அதிகார பூர்வ இணைய பக்கமான TN DIPRயில் வெளியிட்டுள்ள செய்தி, புதுவித சர்ச்சையை கிளப்பியுள்ளது.
TN DIPR பக்கத்தில் முதலமைச்சரின் அறிக்கை, சாதனைகள், தமிழ்நாடு அரசின் அன்றாட பணிகள், ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுமைப்பெண் திட்டத்தினால் மாணவியரின் கல்லூரி சேர்க்கை கடந்த 2022 – 2023 ஆம் ஆண்டில் 29% அதிகரித்துள்ளதாக பிரபல ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளதாக ஒரு செய்தியை பகிர்ந்துள்ளனர்.
இதில் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், புதுமைப் பெண் திட்டத்தினை செப்டம்பர் 06, 2022 அன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, அதாவது 2022 – 2023 ஆம் ஆண்டில் பெண்களின் கல்லூரி சேர்க்கை 29% அதிகரித்துள்ளதாகவும், புதுமைப் பெண் திட்டம் புரட்சிகரமானது போன்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
என்னடா கிடைக்கும் அரசியல் செய்ய என எதிர்பார்த்து கிடக்கும், எதிர்க்கட்சிகளுக்கு அவல் பொறியாய் மாட்டியுள்ளது இந்த செய்தி. ஆம், september 06, 2022 ஸ்கீமை தொடங்கினார்கள்… 2022 – 2023ஆம் ஆண்டிற்கான கல்லூரி சேர்க்கை எல்லாம் ஜீன், ஜூலை மாதங்களிலேயே முடிந்திருக்கும்….
இந்த வருடத்திற்கான கல்லூரி அட்மிஷன் எல்லாம் வருகின்ற ஜூன் , ஜூலையிலே தொடங்க இருக்கின்றன . நிலைமை இப்படியிருக்க, எதை வைத்து மாணவியர் சேர்க்கை உயர்ந்திருப்பதாக சொல்கிறார்கள்?….இதை எல்லாம் பார்த்தா பேய் கதையாவுல இருக்கு , பொய்யா இருந்தாலும் , ஒரு நியாயம் வேணாமா எனவும் ஆங்கில நாளேட்டினையும், தமிழ் நாடு அரசையும் எதிர்க்கட்சியினர் கலாய்த்து வருகின்றனர்.