ஜூன் 28
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். கடந்த 2016 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்த நிலையில் அதன் பிறகு நடிப்பில் இருந்து விலகினார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கணவருடன் இருந்த புகைப்படங்களை நீக்கியதாகக் கூறப்படும் நிலையில், அவர் கணவர் ராகுல் ஷர்மாவை விவாகரத்து செய்துவிட்டதாக இணையத்தில் செய்திகள் உலா வந்த வண்ணம் இருந்தன. நீண்ட நாட்களாக இதுக்குறித்து மனம் திறக்காத அசின், தற்போது அந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “எங்கள் கோடை விடுமுறையின் நடுவில், ஒருவரையொருவர் நேருக்கு நேராக அமர்ந்து உணவை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். மேலும் சில கற்பனையான மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற செய்திகளை கண்டோம். நாங்கள் எங்கள் திருமணம் குறித்து எங்கள் குடும்பத்துடன் செலவிட்ட நேரத்தை நினைவுகூர்ந்தோம். நாங்கள் பிரிந்துவிட்டதாக கேள்விப்பட்டோம். உண்மையாகவா…? தயவுசெய்து இதைவிட சிறந்த வதந்திகளை உருவாக்குங்கள். இதற்காக என் அற்புதமான விடுமுறையில் 5 நிமிடம் செலவிட்டு வீணடித்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.