போலீசை நடிகை ஹனிரோஸ் நாடியது ஏன்?


ஜனவரி – 07,
மலையாள நடிகையான ஹனிரோஸ், தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இவரை பின்தொடர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஹனிரோஸை ஆபாசமாக வர்ணித்து பதிவு வெளியிட்டு வந்தார்.

இதைப் பார்த்த ஹனியின், ரசிகர்கள், ‘ நீங்கள் இதை கண்டிக்காதது ஏன்? இதுபோன்ற கருத்துகளை நீங்கள் ரசிக்கிறீர்களா? என்றெல்லாம் கேட்டு துளைத்தெடுத்தனர்.

இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் முடிவு செய்தார்.

இதன் ஆரம்பமாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த தொழிலதிபர் தொடர்பாக பரபரப்பு புகார்களை ஹனிரோஸ் தெரிவித்தார். அந்த நபர், ஆபாசமாக வர்ணிப்பதுடன் தன்னை பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லையும் தருகிறார் என்று பதிவிட்டார், ஹனிரோஸ்.

அடுத்த கட்டமாக போலீஸ் உதவியையும் நாடினார், ஹனிரோஸ்.
எர்ணாகுளம் காவல் நிலையத்தில் அவர் புகார் மனு அளித்தார்.
தொடர்ந்து தன்னைப் பற்றி ஆபாசமாக கமென்ட்டுகளை வெளியிட்டு வரும் 30 பேர் மீது ஹனிரோஸ் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில், 27 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஹனிரோஸ் புகார் குறித்து, தொடர் நடவடிக்கைள் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

ஹனிரோஸை தொந்தரவு செய்த தொழிலதிபர் கைது செய்யப்படுவாரா?
*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *