மகளிர் உரிமைத் தொகை வழங்க உள்ளதன் எதிரொலி.. முதியோர் உதவித் தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

ஜுலை, 22-

தமிழக அரசு முதியோருக்கான  ஓய்வூதியம் மற்றும் கைம்பெண் உதவித் தொகை ஆகியவற்றை ஆயிரம் ரூபாயில் இருந்து 1200 ஆக அதிகரித்து உள்ளது. ஆகஸ்டு மாதம் முதல் இந்த ஓய்வூதிய உயர்வு அமலுக்கு வருகிறது.

சென்னையில் முதலமைச்சர் மு. க. ஸடாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.  அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் அமைச்சர் தங்கம் தென்னரசு இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது…

தமிழ்நாட்டில் 30.54 லட்சம் பயனாளிகள் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியங்களை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு இந்த உயர்வு பயனளிக்கும்.ஆகஸ்ட் மாதம் முதல் முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.

மேலும் 74 லட்சம் பேர் ஓய்வூதியம் கேட்டு காத்திருப்பு பட்டியலில் இருக்கின்றனர். அவர்களில் தகுதியானோருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட  உதவிகள் வழங்கப்படும்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட முகாம்கள் முகாம்கள் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.  இதுவரை 50 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதி வாய்ந்த எந்த ஒரு பயனாளியும் விடுபட்டு விடக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார்.

மணிப்பூர் இதுவரை இல்லாதளவில் உலகளாவிய கவனம் பெற்றுள்ளது. இதற்கு முதலமைச்சர் கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் திமுகவினர் கண்டனம் எழுப்பி தீர்மானங்களை கொண்டுவருவார்கள்.மணிப்பூரில் வாழும் தமிழர்களுக்கு உதவி தேவைப்படும்பட்சத்தில் முதல்வர் தேவையான நடவடிக்கையை  எடுப்பார்.

யாருக்கும் அடிமை இல்லை என்று கூறும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மணிப்பூர் குறித்து எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை , இதில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது”

இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இதனிடையே முதலமைச்சர் தருமபுரியில் கலைஞர் உரிமைத் தொகை முகாமை திங்கள் கிழமை தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் முகாம்களை பார்வையிடுமாறு அமைச்சர்களை அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்து உள்ள ஸ்டாலின். தமது எண்ணம் முழுவதும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் மீதே இருப்பதாகவும் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *