ஜனவரி-13.
உலகத்தின் மிகப்பெரிய ஆன்மீக திருவிழவான மகா கும்பமேளா உத்திரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரத்தில் தொடங்கி உள்ளது. இந்த நகரத்தின் முந்தைய பெயர் அலகாபாத். அண்மைக் காலங்களி்ல் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நகரங்களில் இதுவும் ஒன்று.
மாக கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது. அதாவது பிரயாக்ராஜ் நகரத்தில் கங்கை ஆற்றுடன் யமுனா ஆறு கலக்கிறது. இதை அல்லாமல் சரசுவதி என்ற ஆறும் கங்கையுடன் கலக்கிறது என்பது நம்பிக்கை. மூன்று ஆறுகள் கலக்கும் இடத்திற்கு திரிவேணி சங்கமம் என்று பெயர். இங்கு நீராடினால் பாவங்கள் நீங்கும், புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திரிவேணி சங்கமத்தில் ஆண்டு தோறும் இதே காலகட்டத்தில புனித நீராடல் நடைபெற்றாலும் அதற்குப் பெயர் கும்பமேளா. பண்ணிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவதற்குப் பெயர்தான் மகா கும்பமேளா. அதுவும் இந்த ஆண்டு நடைபெறுவது 144- வது மகா கும்ப மேளா என்பதால் இது மிகவும் கூடுதல் சிறப்பை பெறுகிறது.
இதற்கு முன்பு கடந்த 2013- ஆம் ஆண்டு மகா கும்ப மேளா நடைபெற்றது.
மகா கும்பமேளாவை ஒட்டி கங்கையில் புனித நீராட 40 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று உத்திரபிரதேச அரசு எதிர்ப்பார்க்கிறது. மகா கும்பமேளா இன்று தொடங்கினாலும் கங்கையில் புனித நீராடல் இரண்டு நாட்களுக்கே முன்பே தொடங்கிவிட்டது. நாளொன்றுக்கு 20 லட்சம் பேர் வீதம் இரண்டு நாட்களிலும் 40 லட்சம் பேர் நீராடி உள்ளனர்.
ஜனவரி – 13 ஆம் தேதியான இன்று தொடங்கிய மகா கும்பமேளா பிப்வரி -26- ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெறம் மகா கும்பமேளா விழாவுக்காக ஏழாயிரம் கோடி ரூபாயக்கும் அதிகமான தொகையை உத்திரப்பிரதேச அரசு செலவிட்டு உள்ளது. சுமார் இரண்டு லட்சம் கோடி பணப்புழக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே இடத்தில் அனைவரும் நீராட வேண்டிய அவசியம் இல்லை. கங்கையில் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு உட்பட்ட இடத்தில் நீராடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து பிராாயக்ராஜ் நகரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விமான வசதியும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் நாட்டில் உள்ளவர்கள் கும்பமேளாவிவில் நீராடி விட்டு திரும்புவதற்கு ரயில் பயணம் என்றால ஐந்து நாட்களும் விமானப் பயணம் என்றால் இரண்டு நாட்களும் ஆகலாம்.
*